Religion
சதுரகிரியில் அமாவாசை வழிபாடு
வத்திராயிருப்பு, செப்.11- சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத அமாவாசை வழிபாட்டு முன்னிட்டு ஏராளமான
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத அமாவாசை வழிபாட்டு முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று காலை 6:00 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்திர மகாலிங்கம் சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. வத்திராயிருப்பு சாப்டூர் போலீசார் , வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.