ரூ.4.70 லட்சம் மோசடி: 3 வாலிபர் மீது குண்டாஸ்
நாமக்கல்:பண மோசடி வழக்கில் கைதான, மூன்று பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
மேட்டூரை சேர்ந்த ராஜ்குமார். கடந்த ஆக.,ல், நாமக்கல்லுக்கு வந்த
ராஜ்குமார், குறைந்த விலையில் நகை கிடைப்பதாக கூறி, நண்பர்
செந்தில்குமாரை அழைத்துக்கொண்டு என்.கொசவம்பட்டி சாலையில் ஒரு
வீட்டுக்கு சென்றார்.
பவுன் நகை தருவதாக கூறி, 2.20 லட்சம் ரூபாய் பெற்றனர். அப்போது,
வீட்டிற்குள் புகுந்த சிலர் செந்தில்குமார், ராஜ்குமாரை கத்தியை
காட்டி மிரட்டி, 2.50 லட்சம் ரூபாயை பறித்து சென்றனர்.
நாமக்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, நாமக்கல்
என்.கொசவம்பட்டி ரோஜா நகரை சேர்ந்த சுபாஷ், 22, ரெட்டிப்பட்டி அண்ணா
நகரை சேர்ந்த மதன், 33, ஸ்ரீதர், 22, உள்ளிட்ட சிலரை கைது செய்தனர்.
மூவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, எஸ்.பி., யாதவ் கிரிஷ்
அசோக் கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதை ஏற்ற கலெக்டர் மதுபாலன்,
கைதான சுபாஷ், மதன், ஸ்ரீதர் ஆகிய மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில்
கைது செய்ய உத்தரவிட்டார்.