மாநில சீனியர் கூடைப்பந்து சென்னை அணிகள் வெற்றி
சென்னை: மாநில சீனியர் கூடைப்பந்து போட்டியில், சென்னை எஸ்.டி.ஏ.டி., --–- ஐ.சி.எப்., அணிகள் வெற்றி பெற்றன.
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், இருபாலருக்குமான 76-வது தமிழ்நாடு சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், நேற்று தொடங்கி 8-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி அணிகள் பங்கேற்றுள்ளன.
சென்னை மாவட்டம் சார்பில் எஸ்.ஆர்.எம்., – ஐ.சி.எப்., கோல்டன் ஈகிள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அணிகள் களமிறங்கியுள்ளன. போட்டிகள் லீக் கம் நாக் -அவுட் முறையில் நடக்கின்றன.
அந்த வகையில், நேற்று முன்தினம் மாலை நடந்த மகளிர் முதல் சுற்றுப்போட்டியில் சென்னை எஸ்.டி.ஏ.டி., அணி, கோவையின் கே.பி.ஆர்., அணியை எதிர்த்து மோதியது. இதில் சிறப்பாக விளையாடிய எஸ்.டி.ஏ.டி., அணி, 85 – 59 என்ற புள்ளிக்கணக்கில் கோவை கே.பி.ஆர்., அணியை வீழ்த்தியது.
தொடர்ந்து நடந்த போட்டியில், சென்னை ஐ.சி.எப்., அணி, விருதுநகரின் வின்ட்ரோஸ் அணியை எதிர்த்து மோதியது. இதில் ஆதிக்கம் செலுத்திய சென்னை ஐ.சி.எப்., அணி 79 – 45 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.