சில மாதங்களிலேயே ரோடு பாலம் பெயர்ந்த அவலம்
தேவகோட்டை, செப். 16 - தேவகோட்டை அருகே மார்கண்டேயன்பட்டி, புதுக்குடியிருப்பு கிராமங்கள் உள்ளன. தேவகோட்டை
தேவகோட்டை அருகே மார்கண்டேயன்பட்டி, புதுக்குடியிருப்பு கிராமங்கள் உள்ளன. தேவகோட்டை நகரிலிருந்து சிவகங்கை செல்ல குறுக்கு சாலை செல்கிறது. திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைக்கும் சருகணி சிவகங்கை சாலைக்கும் இடையே குறுக்காக ரோடு செல்கிறது. இதில் கள்ளிக்குடி விலக்கில் இருந்து புதுக்குடியிருப்பு கிராமம் வரை உள்ள ரோடு முழுவதும் பெயர்ந்து மோசமாக உள்ளது. ரோடு அமைத்து ஒரு ஆண்டு தான் ஆகிறது. ஒரு கி.மீ. தூரம் ரோடு சிதைந்து உள்ளது. டூவீலர் கூட செல்ல முடியாமல் உள்ளது. மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த ரோடு வழியாக சிவகங்கை செல்லும் மக்கள் ரோட்டின் மோசமான நிலைமை காரணமாக 3 கி.மீ. தூரம் சுற்றி செல்கின்றனர். ரோடு அமைத்த ஓராண்டிலேயே மோசமாகி விட்டதை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.