மழைக்கு ஆற்றில் அடித்து சென்ற காட்டெருமை
குன்னூர்:குன்னூரில் கனமழையால் ஆற்றில் இறந்து கிடந்த காட்டெருமை ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மதியம் ஒரு மணி நேரத்துக்கு மேல் கனமழை பெய்தது.
எம்ஜிஆர் நகர் டிப்போ அருகில் ஆற்றுப்பகுதியில் இறந்து கிடந்த காட்டெருமைக்கு கால்நடை டாக்டரை வரவழைத்து, பிரேத பரிசோதனை செய்து புதைக்கவும், பொக்லைன் வரவழைக்கவும் குன்னூர் வனத்துறையினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்நிலையில், மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளம் அதிகரித்து காட்டெருமை அடித்து செல்லப்பட்டது.
தொடர்ந்து, வனத்துறையினர் ஆற்றோர பகுதிகளில் தேடி காட்டெருமையை மீட்டனர்.