கணவர் மீது சந்தேகம் தீக்குளித்த மனைவி சாவு
மேட்டூர்: மேச்சேரி, பெரிய சாத்தப்பாடியை சேர்ந்த நெசவுத்தொழிலாளி செந்தில், 40. அவருக்கும், சென்னை மேற்கு தாம்பரம், திருவள்ளூர் வீதியை சேர்ந்த, கல் உடைக்கும் தொழிலாளி சின்னம்மாள் மகன் மாரியம்மாளுக்கும், 18 ஆண்டுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு மகன், மகன் உள்ளனர். கடந்த, 2 மாலை, வீட்டில் செந்தில், மொபைல் போனில் வேறு ஒருவரிடம் நீண்ட நேரம் பேசியுள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த மாரியம்மாள், மண்ணெண்ணெயை அவரது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அதிர்ச்சி அடைந்த செந்தில், சாக்கை உடல் மீது போர்த்தி தீயை அணைத்தார். அப்போது செந்தில் உடலிலும் தீக்காயம் ஏற்பட்டது. பலத்த தீக்காயம் அடைந்த மாரியம்மாள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். செந்தில் அதே மருத்துவமனையில் உள்ளார். மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.