Economy, business and finance
இந்தியா - நியூசி., வர்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்

புதுடில்லி: இந்தியா - நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம், இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளும் தேதியில் அமலுக்கு வரும் என வர்த்தக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா - நியூசிலாந்து இடையே பொருட்கள் மற்றும் சேவைகள் வர்த்தகத்தை அதிகரிப்பதுடன், முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த ஏப்ரல் 27ல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் நியூசிலாந்துக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 100 சதவீத வரி விலக்கு சலுகையுடன் கூடிய சந்தை வசதி கிடைக்கும். இதுவரை பீங்கான் பொருட்கள், தரைவிரிப்புகள், ஆட்டோமொபைல்கள், வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட இந்தியப் பொருட்களுக்கு 10 சதவீதம் வரை இறக்குமதி வரி விதித்து வந்தது.
மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 1.90 லட்சம் கோடி ரூபாய் நேரடி அன்னிய முதலீடு செய்ய நியூசிலாந்து உறுதி அளித்துள்ளது.