Economy, business and finance
தமிழக கோகோவுக்கு தேவை உயர்வு விலை கிலோ ரூ.100 அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் ஒரு கிலோ கோகோ, 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 330 முதல் 350 ரூபாய் வரை

சென்னை: தமிழகத்தில் ஒரு கிலோ கோகோ, 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் 330 முதல் 350 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது 430 முதல் 450 ரூபாயாக உயர்ந்துள்ளது. உற்பத்தி பாதிக்கும் என்ற அச்சத்தால் சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கோகோ வாங்கி வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோகோ உற்பத்தியாளர் விஸ்வநாதன் கூறியதாவது:
கோகோ உற்பத்தியில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. கோவை, சேலம், தர்மபுரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் முன்னணியில் உள்ளன.
சாக்லேட் தயாரிப்பில் கோகோ முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இதனால் கேட்பரிஸ், கேம்கோ, நெஸ்ட்லே உள்ளிட்ட சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் ஒப்பந்த முறை யில் உற்பத்தியாளர்களிடமிருந்து கோகோ பீன்ஸை கொள்முதல் செய்கின்றன. கேரள கோகோவை விட பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் விளையும் கோகோவில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும். அதனால் சுவையிலும் தரத்திலும் முன்னணியில் உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிலோ 1,000 ரூபா ய் வரை விற்பனையானது.
அதன்பின் சராசரியாக 320 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. தற்போது 450 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் விலை உ யரும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு கூறினார்.