மக்காத கழிவுகள் பெறுவது எப்போது?
திருப்பூர், செப். 11– ‘திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மக்காத கழிவுகள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்
‘திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மக்காத கழிவுகள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் சேகரிக்கப்படும்,’ என மாநகராட்சி கமிஷனர் அமித் தெரிவித்துள்ளார்.
மக்கும் கழிவுகளான காய்கறி, உணவுக் கழிவுகள் மற்றும் சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள் உள்ளிட்ட சுகாதாரக் கழிவுகள் தினமும் சேகரிக்கப்படும். மக்காத கழிவுகளான பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள், காகிதங்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பெறப்படும். பல்புகள், பேட்டரிகள் உள்ளிட்ட சிறப்பு கழிவுகள் சனிக்கிழமை மட்டும் சேகரிக்கப்படும். எனவே, பொதுமக்கள் கழிவுகளை முறையாக தரம் பிரித்து வழங்கி, மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.