நகை மதிப்பீட்டாளர் பயிற்சி இன்று தொடக்கம்
சேலம்:திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு பயிற்சி சார்பில், சேலம், 4 ரோடு, சாமுண்டி வளாகத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, இன்று முதல் வரும், 25- வரை நடக்கிறது. தங்கம் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரைகல்லில் தங்கம் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால்மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகின்றன.
இதில், 18 வயது நிரம்பிய இருபாலரும் பங்கேற்கலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். பயிற்சி முடிவில், இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள், தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள், நகை அடகு நிதி நிறுவனங்களில் பணியில் சேரலாம். சுயமாக நகை கடை, நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளாராகவும், விற்பனையாளராகவும் சேரலாம். அதனால் பயிற்சியில் சேர விரும்புவர்கள், 3 மார்பளவு புகைப்படம், முகவரி, கல்வி சான்றிதழ்களுடன், பயிற்சி கட்டணம், 8,500 ரூபாயுடன் பங்கேற்கலாம். விபரங்கள் பெற, 94437 28438 என்ற எண்ணில் அழைக்கலாம்.