பனை விதை நடும் நிகழ்ச்சி
செஞ்சி: அனந்தபுரம் அடுத்த பனமலை ஏரிக்கரையில், பனமலை மக்கள் நல சங்கம் சார்பில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு நீர்நிலைகள் பாதுகாப்பு அமைப்பாளர் நெடுமாறன், நந்தன் கால்வாய் பாதுகாப்பு குழு நிர்வாகிகள் சேகர், பி கார்த்திகேயன், நம் கழகம் ராஜா, கண்மணி பாவை, பனமலை கிராம மக்கள் நல சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், சதீஷ், காமராஜ், ராமச்சந்திரன், சங்கர், பனமலை ஊராட்சி நிர்வாகிகள், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு 5 ஆயிரம் பனை விதைகளை நட்டனர்.