ரயிலில் அடிபட்டு லாரி டிரைவர் சாவு
தர்மபுரி: சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா கொளத்-துாரை சேர்ந்த லாரி டிரைவர் மோகன், 38. இவர் நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம், பாலக்-கோட்டில் உள்ள, தன் மாமனார் வீட்டிற்கு வந்தார். நேற்று காலை, 6:30 மணிக்கு பாலக்-கோடு - மாரண்டஹள்ளி ரயில்வே தண்டவா-ளத்தை கடந்து சென்றார்.
அப்போது, அந்த மார்-க்கத்தில் வந்த ரயில், அவர் மீது மோதியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். தர்மபுரி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.