Lifestyle and human interest
அம்மாபேட்டை அருகே மக்களுடன் எம்.பி., சந்திப்பு
பவானி:திருப்பூர் எம்.பி., தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை அருகே பூனாச்சியில், திருப்பூர் எம்.பி., சுப்பராயன்
எம்.பி., தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை அருகே பூனாச்சியில்,
திருப்பூர் எம்.பி., சுப்பராயன் மக்களுடன் சந்திப்பு இயக்கத்தில்
நேற்று ஈடுபட்டார். இப்பகுதியில் இயங்கி வரும் ஸ்பேக் எத்தனால்
தயாரிக்கும் தொழிற்சாலையால், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்
குறித்து, மக்களிடம் குறை கேட்டறிந்தார்.
மற்றும் ராமச்சந்திராபுரம் பகுதிகளுக்கு உட்பட்ட காற்று, விவசாய
நிலம் இந்த ஆலையால் பாதிப்படைந்துள்ளது. இதுகுறித்து மக்கள் அளித்த
புகாரின் அடிப்படையில், இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த தொழிற்சாலை இயங்குவதே ஒரு குற்றச்செயல். மக்கள் பலத்த
எதிர்ப்பு தெரிவிப்பதால், தொழிற்சாலையை உடனடியாக மூடவேண்டும்.
தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி வைக்கப்படும். இது தொடர்பாக, 10ம்
தேதிக்கு மேல் முதல்வரை சந்தித்து முறையிடுவேன். இவ்வாறு அவர்
கூறினார்.