Sport
பாகிஸ்தான் அணிக்கு விழுந்தது பலத்த அடி.. ஸ்லோ ஓவர் ரேட்டால் 11 WTC புள்ளிகள் நீக்கம்!

பாகிஸ்தான் அணிக்கு இந்த WTC சுழற்சியில் மேலும் இரண்டு தொடர்கள் மீதமுள்ளன. வரும் நவம்பர் மாதம் இலங்கை அணியுடனும், 2027 மார்ச் மாதம் நியூசிலாந்து அணியுடனும் பாகிஸ்தான் மோதவுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசியதற்காக (Slow Over-Rate) பாகிஸ்தான் அணிக்கு 11 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிகள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளன. இதனால் WTC புள்ளிப்பட்டியலில் ஏற்கனவே கடைசி இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, மேலும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
