தனியார் பஸ் மோதி மாற்றுத்திறனாளி பலி
வாழப்பாடி:பெத்தநாயக்கன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டையை சேர்ந்த, மாற்றுத்திறனாளி பாலமுருகன், 50.இவர்
நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, அதே பகுதியில்
மாற்றுத்திறனாளிக்கான மூன்று சக்கர வாகனத்தில்
சென்றுகொண்டிருந்தார்.
பாப்பநாயக்கன்பட்டி நோக்கி, துளசிராஜன் என்பவர் ஓட்டி வந்த,
'ஸ்வேதா' என்ற பெயர் கொண்ட தனியார் பஸ், பாலமுருகன் மீது மோதியது.
இதில் அவர், சம்பவ இடத்தில் பலியானார். ஏத்தாப்பூர் போலீசார், உடலை
கைப்பற்றி விசாரிக்கின்றனர்.