ஒருவருக்கு கத்திக்குத்து
பெரியகுளம், செப். 18- பெரியகுளம் அருகே எ.புதுக்கோட்டை நேருநகரைச் சேர்ந்தவர் ரஞ்சித் 31. அலைபேசி சிம் கார்டு
பெரியகுளம் அருகே எ.புதுக்கோட்டை நேருநகரைச் சேர்ந்தவர் ரஞ்சித் 31. அலைபேசி சிம் கார்டு விற்பனையாளர். நேரு நகரில் காளியம்மன் கோயில் கரகம் எடுக்கும் திருவிழாவில், இதே பகுதி ஜே.கே.காலனியைச் சேர்ந்த விஜயக்குமார் 28. ஆடிக்கொண்டே அப்பகுதியை கடந்து சென்ற ரஞ்சித் மீது இடித்தார். ரஞ்சித் கேட்டதற்கு மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயக்குமார், ரஞ்சித்தை குத்தினார். தேனி மருத்துவக் கல்லூரியில் ரஞ்சித் அனுமதிக்கப்பட்டார். வடகரை போலீசார் விஜயக்குமாரை கைது செய்தனர்.