Arts, culture, entertainment and media
தீயில் கருகிய குடிசை
வடமதுரை:புத்துார் பூசாரிபட்டியை சேர்ந்த விவசாயி செல்லாண்டி 60, குருந்தம்பட்டி களத்தில் குடிசை வீட்டில் மனைவியுடன் வசிக்கிறார். நேற்று இருவரும் தோட்டத்திற்கு சென்ற நிலையில் வீடு தீப்பற்றி எரிந்து முற்றிலும் நாசமானது.
இவ்விபத்தில் செல்லாண்டி, அவரது மனைவி, மகள், மருமகன் ஆகியோரின் ஆதார், பான், ரேஷன் கார்டுகள், வங்கிப்புத்தகம் உள்ளிட்டவை தீயில் கருகின. வருவாய், போலீஸ் துறையினர் விசாரிக்கின்றனர்.