வடமாடு மஞ்சு விரட்டு
சிக்கல்: சிக்கல் அருகே ராஜாக்கள்பாளையத்தில் மாரியம்மன், முத்து ராக்கம்மன், நாகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து நேற்று வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடந்தது. இதில் மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் கலந்து கொண்டன.
காளைகளை அடக்க நுாறுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு காளைகளுக்கும் தலா 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு 9 வீரர்கள் மாடுகளை பிடித்தனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பணம், பரிசு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.