வரும் 26ல் நடக்கும் மாநில கூட்டத்தில் ஸ்டிரைக் நடத்துவது குறித்து முடிவு: மாநில துணைத்தலைவர்
நாமக்கல்:அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு, தமிழக அரசு செவிசாய்க்கவில்லை என்றால், 26ல் நடக்கும் மாநில
ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு, தமிழக அரசு செவிசாய்க்கவில்லை
என்றால், 26ல் நடக்கும் மாநில கூட்டத்தில், காலவரையற்ற வேலை நிறுத்த
போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்,''
என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அம்சராஜ் கூறினார்.
அரசு ஊழியர் சங்கத்தின், மாவட்ட பிரதிநிதிகள் பேரவையின் ஆலோசனை
கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. சங்க மாநில துணைத்தலைவர் அம்சராஜ்
பங்கேற்று பேசினார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு முழுமையாக அனைவருக்கும்
செயல்படுத்த வேண்டும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில்,
தொகுப்பூதியம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில்
பணியாற்றியவர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழக
அரசில் காலியாக உள்ள காலி பணியிடங்களை, வேலை வாய்ப்பின்றி உள்ள
இளைஞர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு, நிதி நிலையை தாக்கல்
செய்து, சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்து
வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில்,
பல்வேறு கோரிக்கைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கைகள்
தொடர்பாக ஏதாவது சாதகமான அறிவிப்புகள், ஆணைகள் கூட்ட தொடரிலேயே
வெளி வரும் என்று நாங்கள் காத்திருந்தோம். ஆனால், அது தொடர்பாக எந்த
அறிவிப்பும் வரவில்லை.
த.வெ.க., நிறுவன தலைவரான விஜய், முதல்வரான
பின், தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட எந்த அமைப்பையும், அதன்
தலைவர்களையும், அவர் சந்திப்பதில்லை. கோரிக்கைகளையும் கேட்கவும்
இல்லை. கோரிக்கைகளுக்க தீர்வு காணவும் இல்லை. அரசு ஊழியர்களின்
கோரிக்கைகளுக்கு, தமிழக அரசு செவி சாய்க்கவில்லை என்றால், வரும், 26
திண்டுக்கல்லில் சங்கத்தின் சார்பில் நடக்கும் மாநில கூட்டத்தில்,
தமிழக முழுவதும் அரசு ஊழியர்களை திரட்டி, காலவரையற்ற வேலை நிறுத்த
இவ்வாறு அவர் கூறினார்.