Arts, culture, entertainment and media
பிக் பாஸ் தொகுப்பாளர்கள் பெறும் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் பெறும் ஊதியம் குறித்து...
நாகர்ஜுனா, விஜய் சேதுபதி, மோகன் லால், கிச்சா சுதீப் - எக்ஸ்
உலகம் முழுவதுமே மிகுந்த வரவேற்பைப் பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி, நாட்டின் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிகள் அந்தந்த மாநில மக்களால் மட்டுமின்றி மற்றவர்களாலும் பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் என்றாலே வித்தியாசம், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதால், இம்முறை மிகுந்த வித்தியாசமாக மேடையில் இருந்தே போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
எப்போதுமே போட்டியாளர்கள் வெளியேறுவதற்கு மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், இம்முறை எந்த போட்டியாளர் உள்ளே செல்ல வேண்டும் என்பதற்கே மக்கள் வாக்களிக்கும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதுமட்டுமின்றி தெலுங்கும், மலையாளம், கன்னடம், ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் நேற்று தொடங்கின.
இந்நிலையில், இந்தநிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கன்னடத்தில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்குகிறார். இதற்காக இவருக்கு ரூ. 20 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது.
மலையாளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இதற்காக லாலுக்கு ரூ. 30 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது.
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதற்காக இவருக்கு ரூ. 75 - 80 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது.
ஹிந்தி மொழியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். இதற்காக இவருக்கு ரூ. 125 கோடி வழங்கப்படுகிறது.
Do you know how much the hotstar Bigg Boss hosts are paid
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
