Politics
பாரதியார் பல்கலையில் ஆசிரியர் தின விழா
கோவை: பாரதியார் பல்கலையில் ஆசிரியர் தின விழா நேற்று நடந்தது. பல்கலை பதிவாளர் ராஜவேல் தலைமை வகித்து
கோவை: பாரதியார் பல்கலையில் ஆசிரியர் தின விழா நேற்று நடந்தது.
பல்கலை பதிவாளர் ராஜவேல் தலைமை வகித்து பேசுகையில், ‘‘இது ஆசிரியர் பணியை பாராட்டுவதற்கான நாள் மட்டுமல்ல. அவர்களின் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் சமூக பொறுப்பை நினைவுகூரும் நாளாகவும் உள்ளது,’’ என்றார்.
அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் பேசுகையில், ‘‘செயற்கை நுண்ணறிவு ஒரு போதும் ஆசிரியர்களுக்கு மாற்றாக இருக்காது. சமூக பொறுப்பு மற்றும் மனிதநேயத்தை வளர்ப்பதை ஆசிரியர்களால் மட்டுமே செய்ய முடியும்,' என்றார்.
ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட சில ஆசிரியர்களுக்கு விழாவில் பங்கேற்க முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறி, பல ஆசிரியர்கள் விழாவை புறக்கணித்தனர். 250க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் நிலையில் 30 ஆசிரியர்களே பங்கேற்றனர்.