சேலம் அரசு மகளிர் கல்லுாரியில் சேர அழைப்பு... பல்வேறு துறை பாடப்பிரிவுகளில் காலி இடங்கள் அறிவிப்பு..!

சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2026-27 கல்வி ஆண்டுக்கான முதுநிலை மற்றும் இளநிலை சேர்க்கைக்கு காலியிடங்கள் உள்ளன.
சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2026-27 கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கையின் முதற்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. கலைப்பிரிவில் தமிழ், ஆங்கிலம், பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.
அறிவியல் பிரிவில் இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களில் கூடுதல் காலியிடங்களும், வேதியியல், கணினி அறிவியல் பாடப்பிரிவுகளில் குறைவான காலியிடங்களும் உள்ளன.
மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்த மாணவிகளும், இதுவரை விண்ணப்பிக்காத மாணவிகளும் கல்லூரிக்கு நேரில் வந்து புதிதாக விண்ணப்பித்து சேர்க்கை பெறலாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இளநிலை பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவிகள் 10, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச் சான்று, ஆதார் அட்டை, இணையவழி விண்ணப்பப் படிவம் ஆகியவற்றின் அசல் மற்றும் இரண்டு நகல்களை கொண்டு வர வேண்டும்.
முதுநிலை பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவிகள் மேற்கண்ட சான்றிதழ்களுடன், இளநிலை அனைத்து பருவ சான்றிதழ்களின் அசல் மற்றும் இரண்டு நகல்களை கொண்டு வர வேண்டும் என்று கல்லூரி முதல்வர் காந்திமதி தெரிவித்துள்ளார்.
