Politics
ஆசிரியர் தின விழா
தேனி: தேனி நாடார் சரஸ்வதி கலை கல்லுாரியில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார்.
துணை தலைவர் ஜீவகன், பொருளாளர் ராமசந்திரன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல் முன்னிலை வகித்தனர். 2006ல் தேசிய சிறந்த ஆசிரியர் விருது பெற்ற ராமலிங்கம் ஆசிரியர் பணி, மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசினார். வினாடி வினா, அறிவுத்திறன் விளையாட்டுகள் நடந்தன. பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லுாரி செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்பாடுகள் செய்தார்.