Education
வங்கி தேர்வு இலவச பயிற்சி வகுப்பு பதிவு செய்ய இன்றே கடைசி நாள்
கரூர்:கரூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வங்கி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கு, இன்றே பதிவு செய்ய
வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வங்கி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
வகுப்புக்கு, இன்றே பதிவு செய்ய கடைசி நாளாகும் என, கலெக்டர்
முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பல்வேறு போட்டி
தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு
வருகின்றன. சமீபத்தில் வங்கி தேர்வுகளுக்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டது. இப்போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு
நடத்தப்படவுள்ளது. இதில் சேர விரும்புவோர் இரண்டு புகைப்படம்,
தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் மற்றும் ஆதார்அட்டை நகலுடன்.
இன்றைக்குள் (10ம் தேதி) நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 04324-223555, 63830 50010 மற்றும் 63743 19939
என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் றப்பட்டுள்ளது.