கோயில் நிலம் மோசடி ஜாமின் மனு தள்ளுபடி
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர்கோயிலுக்கு சேவை செய்ய ஒரு அறக்கட்டளை மூலம் வழங்கிய ரூ.60 கோடி மதிப்புள்ள 1.73 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம், பத்திரப் பதிவு செய்து ஆக்கிரமித்ததாக முன்னாள் தாசில்தார் அன்பழகன், முன்னாள் வி.ஏ.ஓ., அரசன், உசிலம்பட்டி இளையராஜா உட்பட 19 பேர் மீது மதுரை நகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
கைதான இளையராஜாவின் ஜாமின் மனுவை ஆக.25 ல் மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் அவர் அதே நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி சாய்சரவணன் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் பாண்டி ஆட்சேபம் தெரிவித்தார். நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.