Lifestyle and human interest
குடிநீர் தொட்டியை சீரமைக்க எதிர்பார்ப்பு

கரூர்:கரூர் அருகே, பயன்பாட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்.
பஞ்., யூனியன் கட்டளை அருகே, ரங்கநாதபுரத்தில் தமிழ்நாடு குடிநீர்
வடிகால் வாரியம் சார்பில், மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
அதன் மூலம், ரங்கநாதபுரம் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளுக்கு
குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, மேல் நிலை
குடிநீர் தொட்டி சேதம் அடையும் நிலையில் உள்ளது. குடிநீர் தொட்டியை
சுத்தம் செய்ய, அமைக்கப்பட்டுள்ள ஏணியும் துருபிடித்துள்ளது.
மேலும், சேதம் அடைந்துள்ள குழாய்களில் இருந்து தண்ணீர் வெளியேறி
வீணாகிறது.
எனவே, கட்டளை அருகே ரங்கநாதபுரத்தில் உள்ள,
மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக சுத்தம் செய்ய, மாவட்ட
நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.