முன்னாள் படை வீரர்களுக்கான சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கு
ஊட்டி: ஊட்டியில் முன்னாள் படை வீரர்களுக்காக சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கு மற்றும் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், 11ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கான சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கு
கூட்டம், (வெள்ளி கிழமை) 11ம் தேதி காலை, 10:00 மணிக்கு, ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்தவர்கள், படை விலகல் சான்றுகளுடன், அடையாள அட்டை, ஆதார் கார்டு மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் இரண்டு நகல்களுடன், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.