கஞ்சா கடத்திய இருவர் கைது
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, பேருந்தில் 16 கிலோ கஞ்சா கடத்திய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற, ஆந்திர மாநில அரசு பேருந்தை நிறுத்தி, பயணியரின் உடைமைகளை சோதனையிட்டனர்.
அதில் பயணித்த மதுரையை சேர்ந்த காசிப்பாண்டி, 20, திண்டுக்கல் பகுதியை சேர்ந்த கலையரசன், 21, ஆகியோரிடம், 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார், அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.