Economy, business and finance
விபத்தில் வாலிபர் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், காவேரிப்-பட்டணம் அருகிலுள்ள சந்தாபுரம் கிராமம் அருகே, நேற்று காலை, 7:00 மணிக்கு, தர்மபுரியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த ஹோண்டா கார், தன் கட்டுப்பாட்டை இழந்து, எதிரில் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது.
இதில், காரை ஓட்டி வந்த கரூர் ஒத்தக்கரையை சேர்ந்த மோகன்ராஜ், 25, என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவம-னைக்கு அனுப்பிய நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார். காவே-ரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர். வைத்தனர். இந்த விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில், 2 மணி நேரம் போக்குவ-ரத்து பாதித்தது.