Arts, culture, entertainment and media
‘ஜெயிலர் 2’ தள்ளிப்போகிறதா? - உண்மை நிலவரம் என்ன?

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர் 2’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வர அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஆகியோரும் நடித்திருப்பதாகத் திரை வட்டாரங்கள் தெரிவித்தன.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதத்தில் சென்னையில் தொடங்கி கேரளா, கோவை, கோவா எனப் பல்வேறு பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வந்தது. இதில் ஏகப்பட்ட முன்னணி பிரபலங்கள் நடித்து வந்ததால் நீண்ட மாதங்களாக படப்பிடிப்பு நீண்டது. இதில் கடைசி கட்டத்தில் ஷாருக்கான் நடிக்கவிருந்ததாகவும் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி வெளியான வீடியோவும் ரசிகர்களின் வரவேற்பை அதிகரித்தது. குறிப்பாக பின்னணியில் இடம் பெற்ற இசை பலரது பாராட்டை குவித்தது. பின்பு படத்தின் முதல் பாடலாக ‘அலா போலேலோ(Ala Bolelo)’ வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் இப்படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் சூழலில் புரொமோஷன் பணிகளை ஆரம்பிக்காமல் இருக்கிறது படக்குழு. இதனால் பலரும் படத்தின் நிலை என்னவென்றும் படம் அறிவித்தபடி வெளியாகுமா என்றும் கேள்வி எழுப்பினர். இன்னும் சிலர் படம் தள்ளிப்போவதாக கூறி வந்தனர். ஆனால் அதற்கு வாய்பில்லை என ரஜினியின் பி.ஆர்.ஓ. ரியாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்புள்ள ரஜினி ரசிகர்களே, தயவுசெய்து பதற்றமடைய வேண்டாம். இப்போது வரை எந்த மாற்றமும் இல்லை அனைத்தும் திட்டமிட்டபடியே நடந்து வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Dear Thalaivar Fans Kindly don't panic . No changes till now it's all going as per plans only https://t.co/MQfCNQQRh0
— RIAZ K AHMED (@RIAZtheboss) September 15, 2026
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)