Crime, law and justice
தனிப்படை போலீசாருக்கு வக்கீல்கள் பாராட்டு
கூடுவாஞ்சேரி, செப். 15– கூடுவாஞ்சேரி பெண், கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மணிப்பூர் சென்று, கொலையாளிகளை கைது
கூடுவாஞ்சேரி பெண், கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மணிப்பூர் சென்று, கொலையாளிகளை கைது செய்த, தனிப்படை போலீசாருக்கு வக்கீல்கள் சார்பில், நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
கூடுவாஞ்சேரி, மசூதி தெருவில் வசித்து வந்த ஹயாத்துன் நிஷா, 38, என்ற பெண்ணை, அவருடன் வேலை செய்த வடமாநில தம்பதியர், கடந்த ஆக., மாதம், துண்டு துண்டாக வெட்டி, கொலை செய்து, தப்பினர்.
கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், மணிப்பூர் சென்று, அசாம் மாநிலத்தை சேர்ந்த மாணிக் உத்தீன் லஸ்கர், 22; அவரது மனைவி பகாபதி மாஜூ, 21, ஆகிய இருவரையும் கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
தனிப்படை போலீசாரை உற்சாகப்படுத்தும் விதமாக, கூடுவாஞ்சேரி வக்கீல்கள் சங்கம் சார்பில், நேற்று மாலை, பாராட்டு விழா நடந்தது.