விலை குறைப்பு பெயரில் மோசடி கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது புகார்
ஈரோடு:தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரமைப்பு அலுவலகம் ஈரோட்டில் கட்டப்பட்டுள்ளது. இதை சங்கத்தின் தலைவர்
வணிகர் சங்கங்களில் பேரமைப்பு அலுவலகம் ஈரோட்டில்
கட்டப்பட்டுள்ளது. இதை சங்கத்தின் தலைவர் விக்கிரமராஜா நேற்று
திறந்து வைத்தார்.
தமிழகத்தில் சிறு, குறு வணிகர்களை ஒருங்கிணைத்து சட்டப்பூர்வ
இடர்பாடுகளை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
சாலையோரம் மற்றும் தேவையில்லாத இடங்களில் போடப்படும் வாரச்சந்தைகளை
அப்புறப்படுத்த, முதல்வரிடம் மனு அளிக்கவுள்ளோம். இந்தியாவில்
கார்ப்பரேட் மற்றும் ஆன்லைன் வர்த்த அத்துமீறல்களால் சாமானிய
வியாபாரிகள் கடும் நெருக்கடிகளை சந்திக்கின்றனர். தமிழகத்தில்
அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைப்பதற்கு முழு முயற்சி
எடுப்போம். விலைவாசி உயர்வு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா காலத்தை
போல் சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லா பயணத்தை மத்திய அரசு
அறிவித்தால் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும்.
இவ்வாறு கூறினார்.