மீனாட்சி கோவில் இடமோசடி மேலும் நால்வர் சிக்கினர்

மதுரை: மீனாட்சி கோவிலின், 60 கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை அபகரித்த வழக்கில், மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவிலுக்கு சேவை செய்ய, 1930ல் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான, 60 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை சொக்கிகுளம் அசோதா விலாஸ் பங்களா மற்றும் தோட்டத்தை அபகரிக்கும் வகையில், போலி ஆவணங்கள் வாயிலாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து, 19 பேர் மீது வழக்கு பதிந்த நிலையில், உசிலம்பட்டி இளையராஜா, புதுக்கோட்டை ராஜ்குமார் உட்பட ஆறு பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய புதுக்கோட்டை முத்துராணி, 60, ராஜேந்திரன், 59, ஜோதி, 50, கீதா, 49, ஆகிய நால்வர் நேற்று கைது செய்யப்பட்டனர்.