குப்பையை நான்கு ஆக பிரிக்க கமிஷனர் உத்தரவு ’
கோவை, செப்.12- புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்துவது குறித்து, மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை
புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்துவது குறித்து, மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் கமிஷனர் ரவி தேஜா, குப்பையை 4 வகையாக பிரித்து வழங்க வேண்டும். தினசரி 100 கிலோவுக்கு மேல் கழிவு உருவாக்குவோர், 40,000 லிட்டர் நீர் பயன்படுத்துவோர், 20,000 ச.மீ பரப்பளவு கொண்ட அனைவரும் மொத்த குப்பை உற்பத்தியாளர்களாக கருதப்படுவர்.
இவர்கள் மக்கும் குப்பையை தனியாக பிரித்து, தங்கள் வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை செய்ய வேண்டும். காய்கறி கழிவு, தேங்காய் மூடி, இறைச்சி கழிவு, ஈரக்கழிவு, பிளாஸ்டிக் பாட்டில், கவர், சானிடரி நாப்கின் உள்ளிட்ட சுகாதார கழிவுகள், பேட்டரி, பல்பு உள்ளிட்ட சிறப்பு கழிவுகளை, மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் வழங்க வேண்டும்.
நுண் உரமாக்கல் மையங்கள், உலர் கழிவு சேகரிக்கும் மையங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும். மொத்த கழிவு உற்பத்தியாளர்களிடமிருந்து, திடக்கழிவுகளை பெற்று மேலாண்மை செய்ய மாநகராட்சியில் அனுமதி பெற வேண்டும். மொத்த கழிவு உற்பத்தியாளர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.