Politics
கோவிலில் திருக்கல்யாண வைபவம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பட்டத்தரசி அம்மன் கோவிலில், 58ம் ஆண்டு விழா, கடந்த எட்டாம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது.
நேற்று காலை, மதுரை வீரன் சுவாமி அழைப்பு விமரிசையாக நடந்தது. பொங்கல் வைத்து பூஜை செய்தனர். பின், பட்டத்தரசி அம்மனுக்கும், பட்டீஸ்வரருக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்து, பூஜை செய்தனர். இன்று மஞ்சள் நீராட்டும் விழாவும், மறு பூஜையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
* சூலுார் அடுத்த செங்கத்துறை ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 8ம் தேதி கிராம சாந்தி மற்றும் பூச்சாட்டுதலுடன் திருக்கல்யாண உற்சவ திருவிழா துவங்கியது. நேற்று காலை, ஸ்ரீ மாகாளியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
தொடர்ந்து அலங்கார பூஜை மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.