சிறை தகவல் தொடர்பு கொள்கையை மறு ஆய்வு செய்ய வழக்கு
மதுரை: மதுரை ராஜா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
சிறை கைதிகளிடம் வசூலிக்கப்படும் தொலைபேசி கட்டணங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும். நடைமுறையிலுள்ள தொலைத்தொடர்பு கட்டணங்களுக்கு ஏற்ப நியாயமான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும். ஏழை, முதியோர், பெண்கள், மனநலம் பாதிப்பு, மாற்றுத்திறனாளி கைதிகளுக்கு இலவச தகவல் தொடர்பு வசதி, வழக்கறிஞர்களுடன் இலவச சட்ட ஆலோசனை பெறுவதை உறுதி செய்ய வேண் டும்.
சிறைகளிலுள்ள தகவல் தொடர்பு கொள்கையை மறுஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு தமிழக உள்துறை (சிறைத்துறை) கூடுதல் தலைமைச் செயலர், சிறைத்துறை டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அக்.14க்கு ஒத்தி வைத்தது.