Arts, culture, entertainment and media
விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் இரு போலீசார் காயம்: வாலிபர் மீது வழக்கு பதிவு
கள்ளக்குறிச்சி: சின்னலேத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து போலீசார் இருவர் லேசான காயமடைந்த நிலையில், பட்டாசு வெடித்த வாலிபர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் நகர பகுதியில் செப்.,16 மாலை விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடந்தது. ஊர்வலகத்தில் போலீசார் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சின்னசேலம் பஸ் நிலையம் அருகே ஊர்வலகத்தின் போது திடீரென அரசு அனுமதியின்றி பட்டாசுகளை வெடித்தனர். அதில் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குணசீலன், அருண் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
குணசீலன் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் பட்டாசு வெடித்தது தொடர்பாக செங்குந்தர் வீதியைச் சேர்ந்த மெய்யமுத்து மகன் விஜய்,27; மற்றும் சிலர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.