என்.எல்.சி., ஊழியரை தாக்கியவர் கைது
நெய்வேலி: என்.எல்.சி., பாதுகாப்பு படை ஊழியரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலியில் என்.எல்.சி., பாதுகாப்பு படை ஊழியராக பணியாற்றி வருபவர் சக்திவேல்,52; இவர் கடந்த ஆக.10 ம் தேதி கைகேலார்குப்பம் செக் போஸ்டில் பணியில் இருந்த போது, அனுமதியின்றி பொருட்களை ஏற்றி வந்த வாகனத்தை அனுமதிக்காததால் பிரச்னை ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த 4 பேர் சேர்ந்து சக்திவேலை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தெர்மல் போலீசார் வழக்கு பதிந்து, ஏற்கனவே மூவரை கைது செய்தனர். தலைமறைவான கைகோலர்குப்பத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சுப்பரவேல்,27; என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.