Arts, culture, entertainment and media
டூரிங் டாக்கீஸ்!

ஓஜி பேக்!
பாடலுக்காகவே படங்கள் ஓடிய காலமுண்டு. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டு மென்றால் ராமராஜன் நடித்து இளையராஜா இசையமைத்த படங்களைச் சொல்லலாம். சில வருடங்களாக ராமராஜன் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளது. "கடவுள் தந்த பரிசு'’ என்று பெயர் சூட்டப் பட்டிருக்கும் படத்தில் ராமராஜன் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இது இருவரின் கூட்டணியில் உருவாகும் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கயாடு லைனப்!
கயாடு லோஹர் காட்டில் அடைமழை பெய்துகொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பான் இந்திய நாயகியாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நானியுடன் "தி பாரடைஸ்'’, நிவின் பாலியுடன் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் "மஞ்சனத்தி', சூர்யாவுடன் ‘"சூர்யா 48'’ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதுபோக சிவகார்த்தி கேயனோடு ஒரு படம், பார்க்கிங் இயக்குநர் இயக்கும் படமொன்றிலும் நடிக்க உள்ளார். இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் விடுபட்ட படங்களின் பட்டியலும் தெரியவரும் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.
கம்பேக் ஹீரோயின்!
ரஜினியுடன் "சிவாஜி' படத்தில் நடித்ததால் பிரபலமான ஸ்ரேயா, அப்படத்திற்கு பிறகு தமிழின் முன்னணி நாயகர் களோடு ஜோடி சேர்ந்து நடித்தார். திடீரென திருமணம் செய்து கொண்டு சென்றவர் அதன் பிறகு படங்களில் தலைகாட்ட வில்லை. இந்நிலையில் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வேண்டுமென்ற முனைப்போடு விமலுடன் "சண்டைக்காரி' என்ற படத்தில் நடித்திருக்கிறார். ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் தியேட்டரில் வெளியாக உள்ளது.
திறமைக்கு வாய்ப்பு!
உதவி இயக்குநராக பணியாற்றுகிறபோதே திறமை யானவர்களை, நடிகர்கள் அடையாளம் காண்பதுண்டு. வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த இயக்குநர் மதிமாறன் சூரி நடிப்பில் அதிரடியாக உருவாகியுள்ள ‘"மண்டாடி'’ படத்தின் புகழேந்திக்கு அடுத்து ஒரு ஜாக்பாட் வாய்ப்பு அடித்துள்ளது. கலைப்புலி தாணு தயாரிப்பில் நடிகர் சூர்யாவை இயக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. வெற்றிமாறன் -சூர்யா கூட்டணியில் உருவாகி நிறுத்தப்பட்ட ‘"வாடிவாசல்'’ படத்திற்கான ஆரம்பகட்ட வேலையில், இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் வேலையை கவனித்த சூர்யா தரப்பிலிருந்து இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
பாலிடிக்ஸும் சினிமாவும்!
அரசியலுக்குப் போனபிறகு சினிமாவை தலைமுழுகியவர் களுக்கு மத்தியில், இரட்டை குதிரை சவாரி செய்ய முடிவெடுத்துவிட்டார் கமல்ஹாசன். ஒரு பக்கம் மாநிலங்களவை பாராளுமன்ற உறுப்பின ராகவும், மற்றொருபுறம் சினிமா விலும் நடிக்க ஆரம்பித்துவிட் டார். ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக இருந்த நிலையில் தற் போது "வீர தீர சூரன்' படத்தின் இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் ஒரு படத்தில் இணைந்தது பற்றி அதிகாரப்பூர்வமாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு அறிவித் துள்ளனர். இப்படத்தை கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தோடு இணைந்து டர்மெரிக் மீடியா நிறுவனமும் தயாரிக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)