டூவீலர் மீது மோதிய மான் பெண் சாவு; 2 பேர் காயம்
பெருந்துறை:திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அடுத்த சாணார்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ், 28;
மாவட்டம் செங்கப்பள்ளி அடுத்த சாணார்பாளையத்தை சேர்ந்தவர்
தங்கராஜ், 28; பெருந்துறையில் குன்னத்துார் ரோட்டில் உள்ள
மதுரைவீரன் கோவில் விசேஷத்துக்கு குடும்பத்துடன் பைக்கில் நேற்று
முன்தினம் மாலை வந்தார். தரிசனம் முடிந்து தங்கை பவித்ரா, 23, அக்கா மகன்
நிரஞ்சன், 13, ஆகியோரை அழைத்து சென்றார்.
அருகில் சென்றபோது திடீரென சாலையை ஒரு மான் கடந்தது. அப்போது டூவீலர்
மீது மோதி சென்றதில், மூவரும் சாலையில் விழுந்தனர். பலத்த காயமடைந்த
மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ
கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவித்ரா, இறந்தார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.