கஞ்சா சாக்லேட் விற்க முயன்ற வடமாநில வாலிபர் கைது
ஊட்டி: ஊட்டியில் கஞ்சா சாக்லேட்டு விற்க முயன்ற வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சர்பராஸ் அன்சாரி, 27, கட்டட கான்ட்ராக்டராக பல இடங்களில் பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் ஊட்டிக்கு பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த போது, ஊட்டி ஜி1 இன்ஸ்பெக்டர் விஜய சண்முகநாதன், எஸ்.ஐ., ராஜேஷ்கண்ணா தலைமையிலான போலீசார் அவரின் பையை சோதனை செய்தனர்.
அதில், சாக்லேட்டுகள் இருந்தது. அது குறித்து, அவரிடம் விசாரணை நடத்திய போது, அது ‘பாங்கு டாபி’ எனப்படும் கஞ்சா கலந்த சாக்லேட்டுகள் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.