Economy, business and finance
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: சனிக்கிழமைதோறும் வார விடுமுறை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி நேற்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகரில் எஸ்.பி.ஐ., வங்கி முன் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி கபில் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் வெங்கடேசன், ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மோகன் ராஜ், மாரிக்கனி உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.