லாரி மோதி விபத்து போலீஸ்காரர் காயம்
தொண்டி: தொண்டி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரின் ஜீப் டிரைவராக பணியாற்றுபவர் போலீஸ்காரர் அர்ச்சுணகுமார் 33. இவர் தொண்டி போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். செப்.,8 இரவு 11:00 மணிக்கு தொண்டியில் உள்ள ஓட்டலில் குழந்தைகளுக்கு டிபன் வாங்கி விட்டு டூவீலரில் கிழக்கு கடற்கரை சாலையில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது ஸ்டேட்பாங்க் எதிரில் இரும்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு எதிரில் வேகமாக வந்த லாரி டூவீலர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அர்ச்சுணகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டி எஸ்.ஐ., சதீஷ் வழக்குப்பதிந்து லாரி டிரைவர் நாகை மாவட்டம் உரத்துாரை சேர்ந்த உதயசங்கரை தேடி வருகிறார்.