குப்பையை பிரித்து வழங்க கோரிக்கை
மானாமதுரை, செப்.10- மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் பொதுமக்கள் அனைவரும் திடக்கழிவு மேலாண்மை
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் பொதுமக்கள் அனைவரும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் படி
வீடுகள்,வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் உள்ள குப்பைகளை ஈரக்கழிவு, உலர் கழிவு,சானிட்டரி கழிவு, சிறப்பு கவனக் கழிவு என 4 வகைகளாக தரம் பிரித்து வீடு தேடி வரும் துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அக். 1ம் தேதி முதல் பொதுமக்கள் குப்பை கழிவுகளை 4 வகைகளாக தரம் பிரித்து மட்டுமே வழங்க வேண்டும். அப்படி வழங்காதவர்களின் வீடுகளில் இருந்து குப்பை சேகரம் செய்யப்பட மாட்டாது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி நகராட்சிக்கு ஒத்துழைக்க நகராட்சி கமிஷனர் முத்துச்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.