Politics
காங்., மறுசீரமைப்பு ஆலோசனை
ஆண்டிபட்டி, செப். 6- ஆண்டிபட்டியில் மாவட்ட காங்., சார்பில் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்கான மறு சீரமைப்பு
ஆண்டிபட்டியில் மாவட்ட காங்., சார்பில் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்கான மறு சீரமைப்பு திட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் கோபிநாத் தலைமையில் நடந்தது. காங்., மேலிட பார்வையாளர்கள் விஜய சுந்தரம், நெடுஞ்செழியன் பங்கேற்றனர். வட்டார, நகர, மண்டல பொறுப்புக்கு நிர்வாகிகள் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாநில மருத்துவ அணி தலைவர் தியாகராஜன், மாவட்டத் துணைத் தலைவர்கள் சுப்புராஜ், ரகுராமன், வட்டாரத் தலைவர் ரவி, நகரத் தலைவர் செல்வமணி, செயலாளர் ராஜாராம், வழக்கறிஞர் மலைமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.