பேரூராட்சியில் வார்டு சபா கூட்டம்
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, 8வது வார்டில் நகர்ப்புற வார்டு சபை கூட்டம் நடந்தது.
‘ராமகிருஷ்ணா நகரில் உள்ள சாலையை விரிவுபடுத்தும் பணியை, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சாலையின் மத்தியில் உள்ள சாக்கடைக்கு கவரிங் ஸ்லேப் கூடிய கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும். ராமகிருஷ்ணா நகரின் முகப்பில் இடதுபுறம் செல்லும் சாலையை அம்ருத் பணிகளுக்கு தோண்டிய பின் அதை செப்பனிடவில்லை. தற்போது நடப்பதற்கு கூட முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதால், பழுதடைந்த சாக்கடையையும், சாலையையும் சீரமைத்து தர வேண்டும்.
நாதன்ஹால் சாலை, பி.கே., லே–-அவுட் சாலைகளை பழுது நீக்கி, தார் சாலைகள் அமைத்து தர வேண்டும். ராமகிருஷ்ணா நகரில் சாலை விரிவாக்கம் பொருட்டு, பொதுக் குழாய்களை இடம் மாற்றி தர வேண்டும். இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, ராமகிருஷ்ணா நகரின் பொது போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும். அம்ருத் குடிநீர் விநியோகத்தை சீராக்கி, ஒரே மாதிரியான குடிநீர் வினியோகத்தை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
‘மக்கள் கோரிக்கை தொடர்பாக, நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.