தடகள சாம்பியன்ஷிப் போட்டி சுறுசுறுப்பாக ஓடிய மூத்தோர்
கோவை: மாஸ்டர்ஸ் அதலெடிக் அசோசியேஷன் ஆப் கோயம்புத்துார் சார்பில், 44வது மூத்தோர் தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 245 பேர், பெண்கள் 65 பேர் பங்கேற்றனர்.
நீளம் தாண்டுதல், ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 150 பேர் அடுத்த மாதம் 9, 10, 11ம் தேதிகளில் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் நந்தகோபாலன் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர்.