ஈரோடு கூட்டுறவு சங்கத்தில் இலங்கை குழுவினர் ஆய்வு
ஈரோடு:திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலை கழகத்தின் இலங்கை கூட்டுறவு நிறுவனங்களின்
காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலை கழகத்தின் இலங்கை
கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள்,
அலுவலர்களான, 'கூட்டுறவு மேலாண்மை மற்றும் கூட்டுறவு வணிக
மாதிரிகள்' என்ற தலைப்பில், நான்கு நாட்கள் சர்வதேச கருத்தரங்கு
நடந்தது.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மற்றும் பெருந்துறை வேளாண்
உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயலாக்கம்
குறித்தான கள ஆய்வுக்கு இலங்கை தேசிய கூட்டுறவு பேரவை மற்றும் அதன்
உறுப்பினர் சங்கங்களான இலங்கை சமுர்த்தி மேம்பாடு மற்றும் வேளாண்
ஆராய்ச்சி நிறுவனம், திஸ்ஸமஹாராம பல்நோக்கு கூட்டுறவு சங்கம்,
இலங்கை கூட்டுறவு சிக்கன சங்கம் ஆகியவற்றை சேர்ந்த, 16 பேர் வருகை
புரிந்தனர்.
ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்
கந்தராஜா, பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை
சங்கத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மற்றும் சங்கத்தின் மூலம்
தயாரிக்கப்படும் பசுமை எண்ணெய்கள், ஈரோடு வேளாண் உற்பத்தியாளர்கள்
கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் நடக்கும் மஞ்சள் ஏல விற்பனை, மஞ்சள்
சுரவை ஆலை மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்து
விளக்கினர்.
ஈரோடு துணை பதிவாளர் பிரகாஷ், திண்டுக்கல் காந்தி
கிராம கிராமிய நிகர்நிலை பல்கலை கூட்டுறவு துறை பிச்சை, தேவன், இணை பேராசிரியர் வீரகுமரன் உட்பட பலர்
பங்கேற்றனர்.