கால்வாயில் மாயமான வாலிபர் சடலமாக மீட்பு
ஆவடி: வெள்ளானுார் கிருஷ்ணா கால்வாயில் குளித்தபோது மாயமான நரேஷ்குமார், 29, என்ற வாலிபர், சடலமாக மீட்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியகுப்பம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் நரேஷ்குமார், 29. திருமணமாகாத இவர், ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
வெள்ளானுார் பகுதியில், அவரது நண்பர் வெங்கடேசன் என்பவரது வீட்டு புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு, நேற்று முன்தினம் சென்றார்.
அன்று மதியம், இரு நண்பர்களுடன் வெள்ளானுார் கிருஷ்ணா கால்வாயில் குளித்தபோது மாயமானார். வெள்ளானுார் கிருஷ்ணா கால்வாய் அருகே 300 மீ., தொலைவில், நரேஷ்குமார் உடல், நேற்று காலை கரை ஒதுங்கியது. ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.