திண்டுக்கல் மாணவர்கள் உலக சாதனை
திண்டுக்கல், செப்.13- திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதுாரை சேர்ந்த தனியார் அகாடமி மாணவர்கள் கண்களை
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதுாரை சேர்ந்த தனியார் அகாடமி மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு வண்ணங்கள் கண்டுபிடிக்கும் விநோத உலக சாதனையை படைத்தனர். திருச்சி அகாடமி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 10 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு தொடுதல், நுகர்தல், ஒலி, உணர்திறன் உதவியுடன் வண்ணங்களை சரியாக அடையாளப்படுத்தினர். இந்த விநோத முயற்சியை அர்ஜூனா உலக சாதனை நிறுவனம் புதிய உலக சாதனையாக பதிவு செய்து மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கியது.